கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மலர் வணிக சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இந்நிலையில், இச்சந்தையில் விற்கப்படும் பூக்களின் விலை நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
தோவாளை மலர் சந்தையில் கடந்த வாரம் 750 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ கிலோ 350ரூபாய்க்கும், 750க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ 500 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ கிலோ 70 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாடாமல்லி கிலோ 25 க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேந்தி பூக்கள் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க : குற்றாலத்தில் சுற்றிய 12 அடி நீள வெள்ளை ராஜ பாம்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்..!
மேலும் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ கிலோ 70 ரூபாய்க்கும் , 700 விற்கப்பட்ட முல்லை கிலோ 400 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஸ் கிலோ 80 ரூபாய்க்கும், 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்டெம்ப் ரோஸ் ஒரு கட்டு 300 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட துளசி கிலோ 30 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட தாமரைப்பூ 2 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட மரிக்கொழுந்து 70 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட செவ்வந்தி பூ 100 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட தெத்தி பூ கிலோ 120 ரூபாய் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வருவதை ஒட்டி இனி வரும் வாரங்களில் பூக்களின் விலை அதிகரிக்கும் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.