விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கி கணக்கில் பணம் கிடைக்கப்பெறாதவர்களுக்கான அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள பெரும்பான்மையான பயனாளிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000/- அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக்கணக்கில் பணம் வரவில்லை என தெரிவிப்பவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதார் பதிவு செய்துள்ள கைப்பேசி ஆகியவற்றுடன் 19-09-2023 முதல் அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகி விணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,108 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் விண்ணப்பங்கள் குறித்த தகவல் பெறுவதற்கு, உதவி மையம் (Help Desk) அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் / கோட்டாட்சியர் அலுவலகம் / சார் ஆட்சியர் அலுவலகம் / மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04146-1077 / 04146-223265 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

தகுதியான மேல்முறையீட்டு மனுக்களுக்கு தமிழக அரசே சேவை மையக்கட்டணமாக ரூ.10/- இ-சேவை மையத்திற்கு செலுத்திவிடும்.

இ-சேவை மையங்கள் மூலமாக பெறப்படும் மேல் முறையீட்டு மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர் / சார் ஆட்சியர் ஆகியோரால் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்பட்டு தகுதியிருப்பின் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link