அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77 வயது) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (80 வயது) ஆகியோர் ரேஸில் இருக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் அவ்வப்போது நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் ஜோ பைடனின் வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் அதிக அளவு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அமெரிக்கா வரலாற்றிலேயே 80 வயதில் ஒருவர் அதிபராகப் பதவிவகிப்பது இதுவே முதல் முறை. இந்த நிலையில், இது குறித்து மனம் திறந்துப் பேசிய ஜோ பைடன், “மக்கள் என்னுடைய வயதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அது எனக்குத் தெரியும். என்னுடைய வயது அனைவரைவிடவும் அதிகம்தான். ஆனால் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அதனால்தான் நான் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

டொனால்டு ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் குடியரசுக் கட்சியினர் அமெரிக்க ஜனநாயகத்தை அழிக்க விரும்புகின்றனர். அதனால்தான் நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் கோவிட் தொற்றுநோய் போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க என்னுடைய அனுபவம் உதவியது”‘ என்றார். ஜோ பைடன் இளைஞராக இருந்தபோது அவருக்கு வாய் திணறும் பிரச்னை இருந்திருக்கிறது. இதனால் பல்வேறு கேலி, கிண்டல்களைச் சந்தித்து வந்திருக்கிறார். ஆனால் தற்போது உலக அரங்கில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதோடு அவர் தன்னுடைய வீட்டுப் பகுதியில் அடிக்கடி சைக்கிளில் செல்வதையும் காணலாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு,“ஜோ பைடன் மிகவும் வயதானவராகிவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அந்தப் பதவிக்கு திறனில்லாதவர். அதுதான் மிக பெரிய பிரச்னை என நான் நினைக்கிறேன்” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiYSource link