ஊட்டி மலர் கண்காட்சியே தோற்றுப்போகும் அளவிற்கு பூத்துக்குளுங்கும் மஞ்சள் நிற மலர்களுடன் ஈரோட்டில் ஒரு பூங்கா அமைந்துள்ளது.  பெரியவர்கள் கூட குழந்தைகளாக மாறிப்போகும் பவானிசாகர் அணைப் பூங்காவின் பிரம்மாண்டம் குறித்து பார்க்கலாம்.

மேட்டூர் அணை கட்டிய காலத்தில் உலகில் நேர்கோட்டில் அமைந்த மிகப்பெரிய அணை அதுவாகும். கடல் போல காட்சியளிக்கும் இந்த அணையின் கழுகு பார்வை காட்சிகள் பலரையும் மெய்சிலிர்க்க செய்யும். இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது பவானிசாகர் அணைப்பூங்கா.

பூங்கா என்றாலே எல்லோர்க்கும் பிடிக்கும் இழந்த குழந்தை பருவத்தை நம்மால் மீண்டும் உணரக்கூடிய இடமாக உள்ளது. பார்க்கும் இடமெல்லாம் மரம் , பறந்து திரியும் பட்டாம்பூச்சி அமைதியான சூழல், ஆனந்தமாய் விளையாட பூங்கா, அமர்ந்து பேசிட அமர்விடம் நம்மிடம் ஏதோ ஒன்றை சொல்ல நினைக்கும் இயற்க்கை,நம்மை மகிழ் விப்பதற்காகவே மலரும் பூக்கள், குழந்தைகள் விளையாடவும் குடும்பமாக வந்து தங்கள் அன்பை பறிமாறவும் ஏற்ற இடம் தான் பவானிசாகர் அணைப்பூங்கா.

இந்த பூங்காவை பார்வையிட காலை 8.15 மணி முதல் மாலை 5.45 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது. இங்கு மூன்று வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ரூ.5 கட்டணத் தொகையாகவும், பூங்காவின் பராமரிப்பு செலவிற்காகவும் வசூலிக்கப்படுகிறது. பூங்காவின் உள்ளேயே கேன்டின் மற்றும் ஆவின் ஆகியவைகள் அமைந்துள்ளன. பூங்காவை சுற்றிப்பார்க்க வருபவர்களைக் காட்டிலும் பூங்காவிற்க்கு வெளியே உள்ள மீன் கடைகளில் ருசி பார்க்க வரும் உணவுப் பிரியர்களின் வருகை தான் பூங்காவிற்கு அதிகம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link