தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பொம்மையைகவுண்டன்பட்டியில் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் மூலவரான விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து விநாயகருக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் அப்பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Religion18, TheniSource link