தென்காசியில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 7ம் தேதி அன்று அறிஞர் அண்ணா நெடுந்து ஓட்டப் போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி மீட்டர் தூரமும்,17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 5 கி.மீட்டர் தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீட்டர் தூரமும்,25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கி.மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வழித்தடமானது 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு (8கி.மீ) தென்காசி புதிய பேருந்து நிலையம் தொடங்கி குத்துக்கல்வலசை (1.T Corner } வழியாக வேல்ஸ் சி.பி. எஸ்.சி பள்ளி சென்றடைந்து மீண்டும் தென்காசி புதிய பேருந்து நிலையம் வந்தடைதல். 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ( 10கி.மீ) தென்காசி புதிய பேருந்து நிலையம் தொடங்கி குத்துக்கல்வலசை (1TCorner ) வழியாக வேல்ஸ் சி.பி.எஸ்.சிபள்ளி வழியாக கணக்கப்பிள்ளை வலசை சென்றடைந்து மீண்டும் தென்காசி புதிய பேருந்து நிலையம் வந்தடைதல்.

இதையும் படிங்க : என்ன இப்படி பண்ணி வச்சிருக்காங்க..? திருப்பூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கழிவுநீர் கால்வாய் பணி..!

மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் 5கி.மீ தென்காசி புதிய பேருந்து நிலையம் தொடங்கி குத்துக்கல்வலசை (IT Corner ) வழியாக சாரா மருத்துவமனை சென்றடைந்து மீண்டும் தென்காசி புதிய பேருந்து நிலையம் வந்தடைதல் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெண்களுக்கு ( 5 கி.மீ) தென்காசி புதிய பேருந்து நிலையம் தொடங்கி குத்துக்கல்வலசை (I.T Corner ) வழியாக சாரா மருத்துவமனை சென்றடைந்து மீண்டும் தென்காசி புதிய பேருந்து நிலையம் வந்தடைதல் எனவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டியானது அக்டோபர் 7 அன்று காலை 6.00 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிடவுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசிநாள் அக்டோபர் 6 மாலை 5.30 மணி ஆகும்.

முன்பதிவு செய்திட மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9786918406, 9489153516 என்ற அலைபேசி எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.போட்டியில் பங்கேற்கும் அனைவரும் வழங்கப்பட்டுள்ள படிவத்தை கட்டாயம் பர்த்தி செய்திருக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ2000 நான்காம் பரிசு முதல் பத்தாம் பரிசு வரை ரூபாய் 1000 மும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையானது NEFT மூலம் வழங்கப்படவுள்ளதால் தங்களின் வங்கி முதல் பக்க நகலை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புச்சான்றிதழ் வழங்கப்படும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link