பாஜகவின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக பிரபல ரவுடி படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகளும் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இந்நிலையில் படப்பை குணாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையினர் தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்ட குணா, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பை குணா ஜாமினில் வெளியே வந்தார்.
படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மறைமுகமாக கட்சிக்கு தேவையான நிதி உதவிகள் உள்ளிட்டவற்றை படப்பை குணா செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது, கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்வது உள்ளிட்ட கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் விரைவில் படைப்பை குணா பாஜகவில் இணைவார் எனவும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க : ஸ்ரீமுஷ்ணம் அருகே +2 மாணவர் கொலை.. பகீர் காரணம்.. தலைமறைவானவரை தட்டி தூக்கிய போலீஸ்
இந்நிலையில் காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக, படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பல்வேறு குற்ற பின்னணி கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியல் அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது படப்பை குணாவிற்கும் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.