தேனி
யில் மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி 14.10.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம் என தேனி
மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார் .

விரைவு சைக்கிள் போட்டி :

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இவ்வாண்டும் தேனி மாவட்டத்தின் சார்பாக 14.10.2023 சனிக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் விரைவு சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது.

விளம்பரம்

வயது வரம்பு மற்றும் பரிசு :

13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் , 15 , 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது . இந்தப் போட்டிகளில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் , இரண்டாவது பரிசாக மூன்றாயிரம் ரூபாயும் , மூன்றாவது பரிசாக 2000 ரூபாயும் , நான்கு முதல் பத்து இடங்களை பிடிப்பவர்களுக்கு 250 ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது .

ஏற்பாடுகள் :

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு இவ்வலுவலகம் பொறுப்பேற்காது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் பொதுவான உணவுகள்.!


உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் பொதுவான உணவுகள்.!

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து Bonafide சான்றிதழ் , வயதுச் சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும் எனவும் போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் சொந்த மிதிவண்டி (சைக்கிள்) கொண்டு வருதல் வேண்டும் எனவும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரன மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், கியர், ரேஸ் சைக்கிள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கிமாற்று வழிமூலமோ மட்டுமே வழங்கப்பட உள்ளதால் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் தங்களுடைய வங்கி புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

எனவே போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ மாணவிகள் மேற்கண்ட விதிகளை பின்பற்றி 14.10.2023 சனிக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திற்கு வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கேட்டுக்கொண்டுள்ளார்

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link