நாமக்கல்
மாவட்டத்தில் பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள், பணத்தாள்கள் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘நாமக்கல் நாணயங்கள் கண்காட்சி–2023’ துவங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு கண்காட்சியில், அரிய வகை நாணயங்கள், சேரன், சோழன், பாண்டியன், முகலாய மன்னர்கள் காலத்து நாணயங்கள், செம்பு மற்றும் தங்க நாணயங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும், இந்தியா உள்பட, 200 நாடுகளின் நாணயங்கள், தபால் தலைகள், பணத்தாள்களும், காண்காட்சியில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குத்தீட்டி, குறுவால் உள்ளிட்ட கலை பொருட்களும் பழங்கால கேமிரா, செல்போன், ரேடியோ, பைனாகுலர் ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன.

விளம்பரம்

இந்தக் கண்காட்சியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான அரசர் கால நாணயங்கள் முதல் முகலாய அரசர்களின் நாணயங்கள், பிரிட்டிஷ் அரசு நாணயங்கள், சுதந்திர இந்தியாவின் நாணயங்கள் மற்றும் சமீப காலம் வரை புழக்கத்தில் இருந்து மறைந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அஞ்சல் தலைகளும், அஞ்சல் உறைகளும் இடம் பெற்றுள்ளன.

பலரும் அறியாத இந்திய அரசின் 125, 75 ரூபாய் சிறப்பு வெள்ளி நாணயங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாணய சேகரிப்பாளர்கள் தங்களது நாணயங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். அரையணா, காலணா, சல்லி உள்ளிட்ட பழங்கால நாணயங் களை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல்லில் முதன்முறையாக நாணயங்கள் கண்காட்சி நடத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, பழங்கால நாணயங்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் கூறுகையில், “பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நாமக்கல் நகரில் முதன் முறையாக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில், மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.

வலுவான எலும்புகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட 9 பானங்கள்.!


வலுவான எலும்புகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட 9 பானங்கள்.!

ஆன்லைனின் பணத்தை ஏமாற்றுவதற்கு தயாராக உள்ளனர். இங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த சேரர், சோழர், பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் காலத்தில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் காட்சிக்கு வைத்திருக்கிறோம். அதேபோல், 250க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

இந்த கண்காட்சியை பார்வையிட்ட நாமக்கல்லை சேர்ந்த பிரகாஷ் கூறுகையில், பழங்கால நாணயங்கள் ஒரே இடத்தில் இருப்பது ஆச்சரியமாக உள்ளதாகவும் இதுவரை பார்த்திராத நாணயங்கள் மற்றும் கலைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது குழந்தைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வந்து பார்வையிடுவதாகவும் தனது குழந்தைகளுக்கு பழங்கால நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Source link