மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள அடைவினையனார் அணையின் மூலம்
தென்காசி
மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது காபி அணிகள் செயல்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், பண்பொழி அருகே உள்ள கொப்பளிபுரம் பகுதியில் 15 நாட்களுக்கும் மேலாக காட்டு யானைகளின் அட்டகாசம் நீடித்து வருவதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “இந்த ஆண்டு போதிய மழை இல்லாத நிலையிலும் கார் சாகுபடிக்கு போர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். நெற்பயிர்களை அறுவடை செய்ய ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் காட்டு யானைகள் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் இத்தனை சிறப்புகளா.?
மலையடிவாரப் பகுதியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் புகுந்த காட்டு யானை பயிர்களை மிதித்து நாசமாக்கி உள்ளது. மேலும் அவ்வப்போது காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டுப்பன்றி மற்றும் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…