ரேசன் கடைக்கு செல்லும் போது இனிமேல் கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை, செல்போன் மட்டும் போதும் என்ற வசதி
சென்னை
மாநகர மக்களுக்கு கிடைத்துள்ளது.

பெரிய வணிக வளாகங்கள் முதல் சாலையோர கடைகள் வரை பரந்து விரிந்துள்ள QR Code மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் UPI வசதி, தற்போது சென்னையில் ரேசன் கடைகளுக்குள்ளும் நுழைந்துள்ளது. சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் 1, 700 நியாய விலைக்கடைகளில், தற்போது 1,500 கடைகளில் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதே போல, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மொத்தம் உள்ள 588 நியாய விலைக்கடைகளில் 562 கடைகளில் UPI வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிமையாக பணம் செலுத்தலாம் என தெரிவித்துள்ள கூட்டுறவுத்துறை, டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், மொபைல் முத்தம்மா என்ற பெயரில் ரேசன் கடைகளுக்கு வெளியே விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னையில் விடுபட்டுள்ள கடைகளிலும் விரைவில் UPI வசதி நிறுவப்படும் எனவும், தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…Source link