அதன்படி, வள்ளுவர் கோட்டம் முன்பு பா.ஜ.க நடத்திய போராட்டத்தின்போது, போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்துள்ள அமர் பிரசாத் ரெட்டியை நுங்கம்பாக்கம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டார்.

அமர் பிரசாத் ரெட்டி

அமர் பிரசாத் ரெட்டி

இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின்மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி-மீது எழுந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீஸார் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிந்திருக்கும் நிலையில், கோட்டூர்புரம் போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி, விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEkSource link