அப்போது அங்குச் சாலையில் நின்றுகொண்டிருந்த மாடு அந்த முதியவரை திடீரென முட்டித் தூக்கி வீசியது. தூக்கி வீசப்படத்தில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதியவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. சம்பவமறிந்து பாதிக்கப்பட்டவரை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், இந்த மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாடு முட்டிய மற்றொரு  முதியவர்

மாடு முட்டிய மற்றொரு முதியவர்

திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் தீவிர சிகிச்சையிலிருந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனில்லாது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களில் மட்டுமே திருவல்லிக்கேணி பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களை மாடு முட்டிய தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. சென்னையில் சாலையில் சுதந்திரமாகத் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



Source link