ஓர் கம்பீரமான காட்டு யானைக்கான அனைத்து அம்சங்களையும் கணக்கச்சிதமாகக் கொண்டது விநாயகன் யானை. கோவை மருதமலை, தடாகம், ஆனைக்கட்டி, காரமடை காடுகள்தான் விநாயகன் யானையின் பூர்வீகம். காடுகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் யானைகளின் வழித்தடத்தில் சிக்கலை ஏற்படுத்தியது.
வனத்துக்கு வெளியே வரும் யானைகள் வாழை, சோளம், அரிசி போன்றவற்றை சாப்பிடத்தொடங்கின. அது நாளடைவில் வாடிக்கையாகி, பல யானைகளின் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் விநாயகன் யானைதான்.