கலிபோர்னியா: அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள டெஸ்லா தயாரிப்பு ஆலையை நேற்று பார்வையிட்டார். அவரை வரவேற்ற டெஸ்லாவின் முக்கிய அதிகாரிகள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

உடல்நலக் குறைபாடு காரணமாக இந்தச் சந்திப்பில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பியூஷ் கோயலை நேரில் சந்திக்க முடியாமல் போனது குறித்து எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link